Thursday, July 22, 2010

நண்பன் என்றாய்....
அண்ணன் என்றாய்...
துணை என்றாய்...
இணை என்றாய்....
நலம் விரும்பி என்று கூட
எனக்கொரு பெயர் தந்தாய்.....

எனை எப்படி அழைப்பதென்ற கவலை உனக்கு....
என்ன தருவதென்ற கவலை எனக்கு....

நட்பு...
பாசம்...
அக்கறை...
என என் அன்பை எந்த பெயர் சொல்லி
நீ வாங்கி கொண்டாலும் சந்தோசம் தான்...

உனக்கு அன்பை தருவது மட்டுமே முக்கியம்
எனக்கு...